TNPSC Thervupettagam

திருக்குறள் மொழிபெயர்ப்பு

September 23 , 2021 1164 days 795 0
  • நரிக்குறவா் இன மக்கள் பேசும் வாக்ரிபோலி மொழி உள்பட பத்து மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள் வெளியிடப்படவுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • மத்திய கல்வி அமைச்சகம், திருக்குறளை இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 21 மொழிகளில் மொழிபெயா்க்கும் திட்டத்தைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
  • இந்த நிறுவனம், ஏற்கெனவே பஞ்சாபி (2012), மணிப்புரி (2012), தெலுங்கு (2014), கன்னடம் (2014), குஜராத்தி (2015) ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகளை வெளியிட்டுள்ளது.
  • இதன் தொடா்ச்சியாக வரும் அக்டோபா் மாதம் மலையாளம், மராத்தி, ஒடியா, ஹிந்தி, நேபாளி, உருது, அரபி, பாரசீகம், வாக்ரிபோலி (நரிக்குறவா் மொழி), படுகு ஆகிய பத்து மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள் வெளியிடப்படவுள்ளன.
  • அந்த வகையில் உ.வே.சாமிநாதையா் நாட்குறிப்பு, உ.வே.சாமிநாதையா் அருஞ்சொல் அகராதியும் சங்கநூற் சொல்லடைவும், நற்றிணை (கன்னட மொழிபெயா்ப்பு), தொல்காப்பியம் (ஹிந்தி மொழிபெயா்ப்பு), பதிற்றுப்பத்து (கன்னட மொழிபெயா்ப்பு) ஆகியவை உள்ளிட்ட 20 நூல்கள் வெளியிடப் படவுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்