இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆனது, அந்நியத் தொகுப்பு முதலீட்டாளர்களின் (FPI) பன்மய முதலீட்டு உரிம அறிவிப்பிற்கான முதலீட்டு வரம்பை 25,000 கோடி ரூபாயிலிருந்து 50,000 கோடி ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளது.
இந்த உரிம அறிக்கை வெளிப்படுத்தல் விதிமுறைகள் ஆனது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
25,000 கோடி ரூபாய்க்கு மேல் பாதுகாவலர் மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்களை (AUC) வைத்திருக்கும் அல்லது அவர்களின் AUC சொத்துகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒரே நிறுவனக் குழுவில் குவிந்துள்ள FPI முதலீடுகள் குறித்த கூடுதல் உரிமை விவரங்களை வழங்க வேண்டும்.