TNPSC Thervupettagam

திருத்தியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் திட்டம் (EMC 2.0)

March 28 , 2020 1707 days 510 0
  • இந்தத் திட்டமானது மின்னணு உற்பத்தித் தொகுப்புகள் திட்டத்தின் மூலம் பொது வசதிகள் மற்றும் சேவைகளுடன் சேர்த்து ஒரு உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வளர்ச்சியை வழங்க இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது EMCகள் (Electronics Manufacturing Clusters - EMC) மற்றும் பொதுச் சேவை மையங்கள் ஆகிய இரண்டையும் அமைப்பதற்கு உதவ இருக்கின்றது.
  • EMCகளானது ESDM (Electronics System Development and Maintenance – மின்னணு அமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு) அலகுகளுக்காக அடிப்படைக் கட்டமைப்பு, சேவைகள் மற்றும் இதரப் பொது வசதிகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் புவுயியல் ரீதியில் தொடர்ச்சியாக இருக்கும் நிலப்பரப்புப் பகுதிகளில் அமைக்கப்பட இருக்கின்றது.
  • குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான ESDM அலகுகள் உள்ளன. EMCகள், தொழிற்சாலைப் பகுதிகள்/பூங்காக்கள், தொழிற்சாலைப் பெருவழிப் பாதைகளில் அமைந்துள்ள அந்த சில ESDM அலகுகளுக்காக பொதுத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பொதுச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றின் மீது பொதுச் சேவை மையங்கள் கவனம் செலுத்த இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்