எதிர்காலத்தில் வழங்கப்படும் பொது வேலைவாய்ப்புகளில் திருநங்கைகள்/மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டிற்கென ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வலுவாகப் பரிந்துரைத்துள்ளது.
சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இதர தளர்வுகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றைத் தவிர்த்து கூடுதலாக இந்தப் பரிந்துரை வழங்கப் பட்டது.
மூன்றாம் பாலினத்தவருக்கு ஏதேனும் இட ஒதுக்கீடு, சலுகைகள் மற்றும் தளர்வுகளை வழங்கும் போது, மற்ற சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இதே போன்ற சலுகைகளை வழங்குவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட விகிதத்தைக் கணக்கில் கொண்டு வேண்டும்,
திருநங்கைகளுக்கான இந்தச் சலுகைகளை நிர்ணயிப்பதற்காக மாநில அரசு இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.