தமிழக அரசு ஏப்ரல் 15 ஆம் தேதியைத் திருநங்கையர் தினமாக அனுசரிக்கிறது.
நாட்டில் முதல் முறையாக திருநங்கையர் நல வாரியத்தை 2008 ஆம் ஆண்டில் இதே நாளில் தமிழ்நாடு அரசு நிறுவியது.
2006 ஆம் ஆண்டில், 'அரவாணி' என்னும் வார்த்தைக்கு மாற்றாக மிகவும் கண்ணியமாக ‘திருநங்கை’ என்ற ஒரு பதத்தை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மாற்றினார்.
இந்தப் பெயரிலேயே சமூக நலத்துறையின் கீழ் ஒரு நல வாரியம் அமைக்கப் பட்டு உள்ளது.
இந்த ஆண்டு நிகழ்வின் போது மாநில அளவிலான ‘சிறந்த திருநங்கையருக்கான’ விருதை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான பி.ஐஸ்வர்யாவுக்கு முதல்வர் வழங்கினார்.
இவர் கடந்த 22 ஆண்டுகளாக திருநங்கையர் சமூகத்திற்குச் சேவை செய்து வருகிறார் என்பதோடு, நாட்டுப்புறவியல் மற்றும் நாடகம் மூலம் அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கிரேஸ் பானு மற்றும் மர்லிமா முரளிதரன் ஆகியோர் இந்த விருதினை முறையே 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் பெற்றனர்.