திருநர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அரசாணையை (GO) சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
இது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) பிரிவின் கீழ் கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் திருநர்களுக்கு வெளி இட ஒதுக்கீடு வழங்குகிறது.
பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் அந்தந்த சாதிப் பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படுவார்கள் என்று தெளிவு படுத்துகின்ற மற்றொரு அரசாணையினை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று அரசாங்கம் கொண்டு வந்தது.
பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்கள் இல்லாத திருநர்கள் மட்டுமே MBC பிரிவின் கீழ் உட்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்று 2017 ஆம் ஆண்டு அரசாணை கூறியது.
இந்த உத்தரவு ஆனது, வெளிப்படையாக நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பின் 14,15,16,19 மற்றும் 21வது சட்டப் பிரிவுகளை மீறுவதாக நீதிமன்றம் கருதியது.
அனைத்து சாதிக் குழுக்களிலும் திருநர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனைத்து சாதிக் குழுக்களிலும் உள்ள திருநர்களுக்கு 1% உள் இடஒதுக்கீடு அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா அரசு அமல்படுத்தியது.