TNPSC Thervupettagam

திருநர்களுக்கான இட ஒதுக்கீடு

June 5 , 2024 43 days 190 0
  • திருநர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அரசாணையை (GO) சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
  • இது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) பிரிவின் கீழ் கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் திருநர்களுக்கு வெளி இட ஒதுக்கீடு வழங்குகிறது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் அந்தந்த சாதிப் பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படுவார்கள் என்று தெளிவு படுத்துகின்ற மற்றொரு அரசாணையினை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று அரசாங்கம் கொண்டு வந்தது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்கள் இல்லாத திருநர்கள் மட்டுமே MBC பிரிவின் கீழ் உட்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்று 2017 ஆம் ஆண்டு அரசாணை கூறியது.
  • இந்த உத்தரவு ஆனது, வெளிப்படையாக நியாயமற்றது மற்றும் அரசியலமைப்பின் 14,15,16,19 மற்றும் 21வது சட்டப் பிரிவுகளை மீறுவதாக நீதிமன்றம் கருதியது.
  • அனைத்து சாதிக் குழுக்களிலும் திருநர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அனைத்து சாதிக் குழுக்களிலும் உள்ள திருநர்களுக்கு 1% உள் இடஒதுக்கீடு அளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா அரசு அமல்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்