இந்திய அரசு முதன்முறையாக, திருநர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் கொள்கையை அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகளின் படி, திருநர்களின் பாலின அடையாளத்தை அவர்களின் அனுமதியின்றி வெளியிடச் செய்வதை இந்தக் கொள்கை தடை செய்ய உள்ளது.
இது திருநர்களை நல்ல (நியாயமான) முறையில் நடத்துவதை ஊக்குவிக்கும் மற்றும் பாரபட்சம், துன்புறுத்தல் மற்றும் சார்பு நிலை இல்லாத அளவில் பணியிடங்களை உருவாக்கும்.
பிரதி பெயர், பாலினம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை திருநர் ஊழியருக்கு உறுதி செய்ய இந்தக் கொள்கை முயல்கிறது.