TNPSC Thervupettagam

திருப்புமுனை செயல்பாட்டு நிரல் அறிக்கை 2023

October 29 , 2023 392 days 366 0
  • 2023 ஆம் ஆண்டு திருப்புமுனை செயல்பாட்டு நிரல் அறிக்கை என்பது சர்வதேச எரிசக்தி முகமை (IEA), சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (IRENA) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற உயர்மட்ட சாம்பியன் ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் வருடாந்திர அறிக்கையாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவிய மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியளவு என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்காகும்.
  • ஆனால் 1.5°C இலக்கைப் பேணுவதற்கு 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த வேகம் மூன்று மடங்காக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
  • மின் துறையானது சுமார் 13 ஜிகா டன் CO2 உமிழ்வுக்கு சமமான அல்லது மொத்த உமிழ்வுகளில் 23% பங்கினைக் கொண்டுள்ளது.
  • இது 2010 ஆம் ஆண்டு முதல் சுமார் 10% உயர்ந்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இது 50 சதவீதத்திற்கும் மேலான அளவு வரையில் குறைய வேண்டும்.
  • 2010 ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தின் சராசரி சமப்படுத்தப்பட்ட செலவு ஆனது சூரிய மின்னழுத்தக் கலனுக்கு 86% ஆகவும், காற்றாலைக்கு 60% ஆகவும் குறைந்துள்ளது.
  • இன்று 4 டெரா வாட்ஸ்க்கும் (TW) குறைவாக உள்ள புதுப்பிக்கத்தக்க உற்பத்தித் திறன் தேவையானது 2030 ஆம் ஆண்டிற்குள் 11 TW ஆக இருக்கும்.
  • வேளாண் சார்ந்த உமிழ்வுகள் 2022 ஆம் ஆண்டில் 7.3 GtCO2 ஆக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • நிகரச் சுழிய உமிழ்வு என்ற இலக்கினை நோக்கியப் பாதையில் செல்ல அவை 5.7 GtCO2 ஆக குறைய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்