துறவியக் கவிஞர் திருமங்கை ஆழ்வாரின் அரிய வகை வெண்கலச் சிலையானது, ஆக்ஸ்போர்டில் (ஐக்கியப் பேரரசு உள்ள ஆஷ்மோலியன் என்ற அருங்காட்சியகத்தில் இருந்து தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளது.
இந்தச் சிலையானது, கும்பகோணத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து 1957 முதல் 1967 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திருடப்பட்டது.
திருமங்கை ஆழ்வார் கிபி 8 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார் என்பதோடு இந்து மதத்தின் வைணவப் பாரம்பரியத்துடனான தொடர்பிற்காக பிரபலமாக அறியப்பட்ட தென்னிந்தியாவின் 12 ஆழ்வார் துறவிகளில் ஒருவர் ஆவார்.