TNPSC Thervupettagam

திருவள்ளுவர் தினம் - ஜனவரி 16

January 18 , 2020 1716 days 853 0
  • அனைத்துத் தமிழர்களாலும் திருவள்ளுவருக்காக "திருவள்ளுவர் தினம்" என்று அழைக்கப்படும் ஒரு நாளைக் கொண்டாடுவதற்கான தீர்மானமானது 1935 ஆம் ஆண்டு  ஜனவரி 17 அன்று காளி சிவகண்ணுசாமி பிள்ளை மற்றும் பத்மஸ்ரீ வி. சுப்பைய்யா ஆகியோரால் நிறைவேற்றப்பட்டது.
  • முதலாவது திருவள்ளுவர் தினமானது 1935 ஆம் ஆண்டு மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள், டி.பி. மீனாட்சிசுந்தரம் மற்றும் திரு. வி. கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப் பட்டது.
  • தற்போதையக் காலகட்டத்தில், இது பொதுவாக ஜனவரி 15 அல்லது 16 ஆம் தேதிகளில் தமிழகத்தில் அனுசரிக்கப் படுகின்றது. இது பொங்கல் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொண்டாடப் படுகின்றது.
  • திருவள்ளுவர் ஆண்டானது வள்ளுவர் ஆண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. இது தமிழ்நாட்டில் பயன்படுத்துவதற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தமிழ் நாள்காட்டி முறையாகும்.
  • பரவலாகப் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாள்காட்டியுடன் ஒப்பிடும் போது, திருவள்ளுவர் ஆண்டானது கூடுதலாக 31 ஆண்டுகளைக் கொண்டிருக்கும்.
  • உதாரணமாக, கிரிகோரியன் நாள்காட்டியில் 2019 ஆம் ஆண்டானது திருவள்ளுவர் ஆண்டு முறையில் 2050 ஆக இருக்கும்.
  • 1971 ஆம் ஆண்டில், திருவள்ளுவர் ஆண்டானது கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசாங்கத்தால் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இது 1972 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • 1981 ஆம் ஆண்டில் மதுரையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டில், அப்போதைய முதலமைச்சரான எம். ஜி. ராமச்சந்திரன் திருவள்ளுவர் ஆண்டை அனைத்து அரசாங்க ஆவணங்களிலும் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கு வேண்டி ஒரு  முறையான உத்தரவைப் பிறப்பித்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்