TNPSC Thervupettagam

திருஷ்டி 10 ‘ஸ்டார்லைனர்’

January 14 , 2024 320 days 285 0
  • இந்திய நாட்டின் கடற்படையானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் திருஷ்டி 10 ‘ஸ்டார்லைனர்’ எனப்படுகின்ற ஆளில்லா வான்வழி வாகனத்தினை (UAV) ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தியது.
  • திருஷ்டி 10 ‘ஸ்டார்லைனர்’ என்பது ஒரு மேம்பட்ட உளவு, கண்காணிப்பு மற்றும் தடங்காணல் (ISR) வாகனமாகும்.
  • இது 36 மணிநேரம் இயங்கும் திறன் மற்றும் 450 கிலோ எடைவரை சுமக்கும் திறன் கொண்டது.
  • ஆளில்லா வான்வெளி வாகன அமைப்பின் தகுதி பெறலுக்கான நேட்டோ அமைப்பின் STANAG 4671 சான்றிதழைக் கொண்ட அனைத்து வகையான வானிலையிலும் இயங்கக் கூடிய ஒரே இராணுவப் பயன்பாட்டு வாகனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்