TNPSC Thervupettagam

திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாநிலம் – அருணாச்சலப் பிரதேசம்

January 1 , 2018 2549 days 909 0
  • சிக்கிமிற்கு அடுத்து வடகிழக்கு இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாநிலம் (ODF- Open Defecation Free) என்ற தகுதியை பெறும் இரண்டாவது மாநிலமாக அருணாச்சலப் பிரதேச மாநிலம் உருவாகியுள்ளது.
  • மாநில அரசின் கூடுதல் ஊக்கத் தொகையாக ஒரு கழிவறைக்கு 8000 ரூபாய் என்று வழங்கப்பட்டதோடு சேர்த்து சுவச் பாரத் திட்டம் (கிராமின்) என்ற திட்டத்தின் கீழ் இந்த முயற்சி முழுவதுமாக மேற்கொள்ளப்பட்டது.
  • மேலும் மாநில அரசு அக்டோபர் 2ம் தேதியன்று தவாங் என்ற இடத்தில் சுவச் பாரத் (கிராமின்) திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்களின் நீடித்தத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு சுவச் அருணாச்சலம் என்ற திட்டத்தை ஆரம்பித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்