தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆனது திறன்சார் தொழிலாளர்ப் பற்றாக்குறைக் குறியீட்டினை (OSI) அறிமுகப்படுத்தியுள்ளது.
OSI என்பது, திறன் சார் தொழிலாளர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் தொழில்கள் குறித்தத் தரவு சார்ந்தத் தகவல்களை வழங்கும் என்பதோடு வேலை தேடுபவர்களின் திறன்களை தொழில்துறை தேவைகளுடன் ஒருங்கிணைக்கவும் இது உதவும்.
கூடுதலாக, இந்த அமைச்சகம் ஆனது பன்மொழி சார்ந்த e-Shram சிறிய இணைய தளம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
E-Shram சிறிய இணைய தளங்களானது தேசிய e-Shram தரவுத் தளத்துடன் மிக நன்கு ஒருங்கிணைக்கப் பட்ட மாநில வாரியான எண்ணிமத் தளங்கள் ஆகும்.
அவை முறைசாராத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுடன் சேர்த்து மத்திய மற்றும் மாநில நலத் திட்டங்களை அணுகுவதற்கான ஒற்றைத் தீர்வினை வழங்குகின்றன.