அரசின் முதன்மையான திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியின் பயன்பாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இதில் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
100 திறன்மிகு நகரங்களைக் கட்டமைப்பதற்கு மத்திய அரசு ரூ.30,751.41 கோடியை வெளியிட்டுள்ள நிலையில் அதில் 90% நிதியானது பயன்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசானது 2015 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று திறன்மிகு நகரங்கள் திட்டத்தைத் தொடங்கியது.
மத்திய அரசானது இத்திட்டத்திற்காக ஒரு நகரத்தினைக் கட்டமைப்பதற்காக வேண்டி ஆண்டுக்குச் சராசரியாக ரூ.100 கோடி என்ற அளவில் ஐந்தாண்டுகளுக்கு ரூ.48,000 கோடி நிதியுதவி அளிக்கும்.