TNPSC Thervupettagam

திறன்மிகு விவசாயம் பற்றிய கூடுகை : புது தில்லி

September 2 , 2017 2511 days 861 0
  • திறன்மிகு விவசாயம் பற்றிய கூடுகை (‘Smart Agriculture Conclave’) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி - தொழில்நுட்பவியல் துறையால் (Department of Bio-Technology -DBT) புதுதில்லியில் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • கூடுகை நிகழ்ந்த நாள் : ஆகஸ்ட் 30 , 31
  • இந்தக் கூடுகையினை இந்திய உயிரி - தொழில்நுட்பவியல் துறையுடன் இணைந்து இங்கிலாந்தின் உயிரி - தொழில்நுட்ப துறையும் (Biotechnology and Biological Sciences Research Council – BBSRC) ,இங்கிலாந்து ஆராய்ச்சிக் குழுமமும் (Research Councils UK - RCUK) ஒருங்கிணைத்தன.
  • இக்கூடுகையின் முடிவாக, இந்தியாவில் ‘விவசாய மண்டலம்’ (FarmerZone) அமைக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உறுதி ஏற்றுள்ளது.
  • விவசாய மண்டலமானது, சிறு, குறு மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாய மக்களுக்கு இலவச திறன்மிகு தொழில்நுட்ப உதவிகளை ஏற்படுத்தி தர உருவாக்கப்படவுள்ளது. மேலும், விவசாய பொருட்களை நேரடியாக விற்பதற்காக ‘விற்பனை சந்தை மண்டலம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்