பம்பாய் – இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் குழுவானது “டிஜிட்டல் இதயத் துடிப்பளவியை” உருவாக்கியுள்ளது.
இது தொலைதூரத்திலிருந்து நோயாளியின் இதயத் துடிப்பைக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து கொள்ளும். இதன் மூலம் கொரானா வைரஸ் பாதித்துள்ள நோயாளியிடமிருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்க முடியும்.
இது பம்பாய் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப வணிக மையத்திலிருந்து “ஆயுடிவைஸ்” (AyuDevice) என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்தப் பொருளானது ரிலையன்ஸ் மருத்துவமனை மற்றும் PD இந்துஜா மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வடிவமைக்கப் பட்டுள்ளது.