TNPSC Thervupettagam

திறன் குறைந்த தொழிலாளர்களுக்கென காவி நிறத்திலான கடவுச் சீட்டு

January 18 , 2018 2505 days 806 0
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குடியேற்றத்தை சரிபார்க்கும் தேவை அவசியமான (Emigration Check Required Category) கடவுச் சீட்டுகள் காவி நிற உறையில் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
  • குடியேற்றத்தை சரிபார்க்கத் தேவைப்படாத வகையிலான கடவுச் சீட்டுகள் நீல நிற உறையைக் கொண்டதாக தொடரும்.
  • மேலும் கடவுச் சீட்டுகள் சட்டம் 1967 மற்றும் கடவுச்சீட்டு விதிகள் 1980 ஆகியவற்றின் கீழ் அளிக்கப்பட்ட கடவுச்சீட்டின் கடைசி பக்கமும் மற்ற இதர ஆவணங்களும் இனிமேல் அச்சிடப்பட மாட்டாது.
  • குறைந்த பட்சத் தகுதியாக பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை கூட படிக்காதவர்கள் இந்த குடியேற்றம் சரிபார்க்கும் வகைப் பட்டியலில் (Emigration Check Required Category) அடங்குவர்.

இந்தியாவில் கடவுச் சீட்டுகளின் வகைகள்

  • வழக்கமான கடவுச்சீட்டு – கடல் ஊதா நிற உறை கொண்டது. இது விடுமுறை மற்றும் வியாபார பயணங்கள் போன்ற சாதாரண பயணங்கள் மேற்கொள்ளும் குடிமகன்களுக்காக வழங்கப்படுகிறது.
  • இராஜ்ஜிய ரீதியான கடவுச்சீட்டு – அரக்கு நிற உறை கொண்டது. இது இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், கூடுதல் செயலாளர் மற்றும் அதற்கும் மேல் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகளுக்கும்,  இராஜ்ஜிய ரீதியான அதிகாரிகளுக்கும் வழங்கப்படுவதாகும்.
  • அலுவலக கடவுச்சீட்டு - வெள்ளை நிற உறை கொண்டது. இந்திய அரசு தரப்பில் அலுவலகப் பிரயாணம் மேற்கொள்ளும் தனிநபர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்