TNPSC Thervupettagam

திறன் மேம்பாட்டு மையம்

May 20 , 2018 2415 days 770 0
  • ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது (United Nations Development Programme-UNDP), தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் நம்பிக்கை வேண்டியோருக்கான திறன் மேம்பாட்டு மையம் (Skill development centre for clients of Bharosa) எனும் பாதிக்கப்பட்ட துயருடைய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு ஆதரவு மையத்தை துவங்க உள்ளது.
  • பாதிக்கப்பட்ட (vulnerable) மற்றும் நலிவு நிலை பெண்களுக்கு (marginalised women) திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பதே இத்தொடக்கத்தின் நோக்கமாகும்.
  • திஷா திட்டத்தின் (Disha project) கீழ் ஹைதராபாத் காவல்துறை மற்றும் ஐநா வளர்ச்சி திட்ட அமைப்பு ஆகியவற்றிற்கிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் வழியே இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.
  • பரோசா (நம்பிக்கை) என்பது 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் நகர காவல்துறையால் துவங்கப்பட்ட ஓர் தொடக்கமாகும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவினை வழங்கும் ஓர் நடப்பு நிலை வசதிகளினைக் (state-of-the-art centre) கொண்ட மையமே பரோசா மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்