TNPSC Thervupettagam
November 24 , 2017 2587 days 1689 0
  • திவால் சட்டத்தில் (IBC – Insolvency and Bankruptcy Code) சில திருத்தங்களை கொண்டு வருவதற்காக அரசியலமைப்புச் சட்டம் விதி 123-ன் கீழ் அவசர சட்டத்தை இயற்றிட வேண்டி மத்திய அமைச்சரவை அளித்த முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  • இந்த அவசர சட்டத்தின் மூலம் திவால் சட்டத்தின் பிரிவுகள் 2,5, 25, 30, 35 மற்றும் 240 களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். மேலும் புதிதாக 29A மற்றும் 235A எனும் இரு பிரிவுகள் சேர்க்கப்படும்.
  • டிசம்பரில் கூட்டப்பட உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
  • புதிதாக இணைக்கப்பட உள்ள பிரிவு 29-Aன் படி இச்சட்டத்தின் கீழ் வேண்டுமென்றே கடனை திரும்பி செலுத்தாதவர்கள் (Wilful Defaulters) மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடம் வாராக்கடன்களை வைத்திருப்பவர் போன்றோர் திவால் தீர்மான செயல்முறையின் சொத்துகளுடைய ஏலத்தில் பங்கெடுப்பதை தடை செய்கிறது.
  • இந்த சட்டமானது பெருநிறுவனங்கள் விவகார துறை அமைச்சகத்தால் (Corporate Affairs Ministry)  அமல்படுத்தப்படுகின்றது.
  • பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகமானது திவால் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றை சரி செய்ய தேவையான வழிகளை பரிந்துரைக்க 14 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
  • திவால் சட்டமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. இது சந்தைசார்ந்த, குறிப்பிட்ட காலத்திற்குள்ளான திவால் தீர்மான செயல்முறை மூலம் வங்கிகளின் கடனை வசூலிக்க வழிவகை செய்கின்றது.
  • திவால் சட்ட குழுவின் தலைவரான பெருநிறுவன விவகாரத்துறை செயலர் இன்ஜேதி சீனிவாஸ், இந்த சட்டத்தின் அமலாக்கத்திற்கு முக்கிய பங்கு வகிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்