TNPSC Thervupettagam

தி இந்து - 140வது ஆண்டு விழா

September 24 , 2018 2259 days 1053 0
  • தேசிய ஆங்கில நாளிதழான தி இந்து, செப்டம்பர் 20, 2018 அன்று வெற்றிகரமாக தனது 140வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றது.
  • நாட்டின் பழமையான செய்தித்தாள்களில் ஒன்றான இது 1878-ம் ஆண்டு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • ஆரம்பித்த சமயத்தில் இப்பத்திரிக்கையானது நமக்காக என்று பொருள்படும் “Ourselves” என்ற தலைப்பில் வாரப்பத்திரிக்கையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1889-ம் ஆண்டு ஆங்கில தினசரியாக மாறியது.
  • தென்னிந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில்  தி இந்து செய்தித்தாள் விற்பனையாகிறது. மேலும் இது 1995 ஆம் ஆண்டில் ஆன்லைன் (நிகழ்நேர) பதிப்பை வழங்கிய முதலாவது இந்திய செய்தித்தாளாகும்.
  • தனது ஆண்டு விழாவை குறிப்பிடும் வகையில் தனது வாசகர்களுக்காக சிறப்பு இணைப்பாக “The Hindu @ 140” என்ற இணைப்பை இது வெளியிட்டு இருக்கின்றது.
  • தனது 140வது ஆண்டு விழாவை அனுசரிப்பதற்காக தி இந்து லவுன்ச் அமைப்பு தனது இணையதள அங்காடியான” The Hindu Lounge Online” என்பதை நிறுவியிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்