TNPSC Thervupettagam

தீங்கு விளைவிக்கக்கூடிய ஆல்கேயின் வளர்ச்சி

May 13 , 2018 2259 days 792 0
  • புவி வெப்பமயமாதல் ஆனது நாக்டிலியூகா ஆல்கேயின் (Noctiluca Algae) பெருக்கத்திற்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் ஓசை (Sea Tinkle) எனவும் அழைக்கப்படும் இந்த ஆல்கேயானது அரபிக்கடலில் காணப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆல்கே ஆகும். இந்த ஆல்கேதான் மும்பை கடற்கரையின் நிறம் கருப்பாக மாறுவதற்கான காரணம் ஆகும்.
  • இது தொடர்பான ஆய்வு, மத்திய புவி அறிவியல் (Ministry Earth Science) அமைச்சகத்தின் அங்கமான பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியாவின் தேசிய மையம், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு ஆகியவற்றின் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டது.

  • கடல் பொறி எனவும் நாக்டிலியூகா ஆல்கே அழைக்கப்படுகிறது. இந்த ஆல்கே, டையோடம் எனப்படும் மீன் உணவுச் சங்கிலியின் அடித்தளத்தில் காணப்படுகின்ற முக்கிய பிளாங்க்டான் உயிரினங்களை அழிக்கும் ஒரு பல்லுருவி ஆகும்.
  • இந்த ஆல்கே அதிக அளவிலான அம்மோனியாவை (கழிவுகள்) வெளியிடுகின்றன. இந்த அம்மோனியா அதிக அளவிலான மீன்கள் இறப்பதற்குக் காரணமாக அமைகின்றது.
  • கடுமையான புவி வெப்பமயமாதல் இந்த ஆல்கேக்களின் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். ஆல்கேக்களின் இந்தப் பெருக்கம் மீன்களின் உணவுச் சங்கிலிகளை பாதிப்படையச் செய்வதோடு மீன்வளம் இந்தப் பகுதியில் குறையவும் வழிவகுக்கிறது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்