TNPSC Thervupettagam

தீங்கு விளைவிக்கக் கூடிய (பேய்) வால் நட்சத்திரம்

January 2 , 2024 329 days 355 0
  • அதிகாரப்பூர்வமாக 12P என அழைக்கப்படும் “தீங்கு விளைவிக்கக் கூடிய வால் நட்சத்திரம்” ஆனது, தற்போது பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது. விரைவில் இது ஒரு குறிப்பிடத்தக்கப் பகுதியில் மோதி வெடிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த வால் நட்சத்திரம் ஆனது, எவரெஸ்ட் சிகரத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது.
  • ஒரு கிரையோவோல்கானோ (குறை வெப்பநிலையில் உள்ள எரிமலை) என வகைப் படுத்தப் பட்டுள்ள இது, உறைந்த சோடா வெடிப்பது போல் வாயு மற்றும் பனிக்கட்டி திரண்டு பற்றுவதன் காரணமாக வெடிக்கிறது.
  • இந்த வால் நட்சத்திரம் ஆனது 18.6 மைல் விட்டத்துடன், ஒரு சிறிய நகரத்தின் அளவுடன் ஒப்பிடக்கூடிய வகையில் மிகப்பெரியது.
  • இது நன்கு அறியப்பட்ட ஹாலி வால் நட்சத்திரத்தினைப் போன்று, தோராயமாக 71.2 வருடங்களுக்கும் ஒருமுறை சூரியனைச் சுற்றி அதன் சுற்றுப் பாதையை நிறைவு செய்கின்ற ஒரு குறுகிய கால வால் நட்சத்திரம் ஆகும்.
  • 200 ஆண்டுகளுக்கும் குறைவான சுற்றுப்பாதை காலம் கொண்ட இது போன்ற வால் நட்சத்திரங்கள் குறுகிய கால வால் நட்சத்திரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்