- பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழ் (BPL – Below Poverty Line) உள்ள குடும்பங்களில் LPG இணைப்புகளை அதிகரிக்க உதவுவதற்காக IIT கரக்பூரின் ஆராய்ச்சியாளர்கள் “தீர்மானிக்க உதவும் அமைப்பு” (Decision support system-DSS) என்பதை உருவாக்கியுள்ளனர்.
- தேசிய அளவில் ஆற்றல் கொள்கை பகுப்பாய்வு செய்வதற்கென ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு இதுவேயாகும்.
- இது ஒரு கணித நிரலாக்கம் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த, அறிவார்ந்த முடிவுகளை எடுக்க உதவும் கணினி நிரல் ஆகும்.
- இந்த கணித மாதிரியானது ஒரு பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கான காலக் கெடுவில்
- ஒரு பிராந்தியத்திற்குத் தேவையான மொத்த (BPL) இணைப்புகளின் எண்ணிக்கை
- நியமிக்கப்பட வேண்டிய முகவர்களின் எண்ணிக்கை
ஆகியவற்றைக் கண்டறிந்து இருக்கின்றது.