TNPSC Thervupettagam

தீவிரப்படுத்தபட்ட இந்திர தனுஷ் தடுப்பூசித் திட்டம்

October 9 , 2017 2604 days 1456 0
  • குஜராத்திலுள்ள வட்நகரில் தீவிரப்படுத்தபட்ட இந்திர தனுஷ் தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் மூலம் வழக்கமான நோய்த்தடுப்பூசி திட்டங்களின் கீழ் உள்ளடங்காமல் போன கர்ப்பிணிப்  பெண்கள் மற்றும் இரண்டு வயதிற்கு கீழுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நோய்த்தடுப்புத்  திறனூட்டல் (immunisation) மேற்கொள்ளப்படும்.
  • இத்திட்டத்தின் மூலம் இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 90 % மக்களுக்கு முழு நோய்த்தடுப்புத் திறனூட்டலை 2020 க்கு  முன்னரே  மேற்கொள்ள வேண்டும் என்ற  கால வரம்புடைய இலக்கை முன்னரே அடைய வைப்பது ( 2018-டிசம்பருக்குள் ) இத்திட்டத்தின்  நோக்கம்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட குடிபெயரும் மக்கள் தொகையுடைய நகர்ப்புற குடிசைப் பகுதிகள், நகர்ப்புற பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் குறைந்த செயல்திறனுடைய பகுதிகளில் தீவிரப்படுத்தபட்ட இந்திர தனுஷ் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்படும்.
  • தேசிய சுகாதார கணக்கெடுப்புகள், சுகாதார மேலாண்மை தகவல் தரவு அமைப்பு, உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு தரவுகள் போன்ற மூன்று தரவுகளின் அடிப்படையில் இத்திட்டத்திற்கான பகுதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
  • தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் (National Urban Health Mission) குறிப்பிடப்பட்டுள்ள நகரங்கள் மற்றும் நகர குடியேற்றப் பகுதிகளிலும் தீவிரப்படுத்தபட்ட இந்திரா தனுஷ் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • PRAGATI (Proactive Governance and Timely Implementation) எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் திட்டம் மாவட்ட, மாநில, தேசிய அளவில் கண்காணிக்கப்படும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்