TNPSC Thervupettagam

தீவிரப்படுத்தப்பட்ட போலியோ நோய் எதிர்ப்புத் திறனூட்டல் பிரச்சாரம் - தமிழ்நாடு

January 10 , 2020 1838 days 883 0
  • ஜனவரி 19 ஆம் தேதியன்று தீவிரப்படுத்தப்பட்ட போலியோ நோய் எதிர்ப்புத் திறனூட்டல் பிரச்சாரத்தின் ஒரே சுற்றில் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து வழங்க தமிழகப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்த ஆண்டு, போலியோ நோய் இல்லாத 16வது ஆண்டில் தமிழகம் நுழைந்துள்ளது.
  • மாநிலத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் போலியோ தடுப்பு மருந்து மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்