TNPSC Thervupettagam

தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி

March 19 , 2019 2080 days 636 0
  • இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (Shanghai Cooperation Organisation - SCO) உள்ள இதர உறுப்பு நாடுகள் ஆகியவை இந்த ஆண்டு SCOவால் நடத்தப்படும் தீவிரவாத எதிர்ப்புக் கூட்டுப் பயிற்சியில் பங்கு கொள்ளவிருக்கின்றன.
  • 2019 ஆம் ஆண்டில் “சாரி-அர்கா தீவிரவாத எதிர்ப்பு” என்ற கூட்டுப் பயிற்சியை நடத்தும் முடிவானது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற SCO-ன் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் 34வது சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட யுரேசியாவின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அமைப்பாகும்.
  • இதன் நோக்கங்கள் உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு தொடர்பான சவால்கள், இராணுவ ஒத்துழைப்பு, நுண்ணறிவுப் பரிமாற்றம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு ஆகியவற்றின் மீது ஓத்துழைப்பை ஏற்படுத்துவதாகும்.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 2017 ஆம் ஆண்டு ஜூன் 09 அன்று SCOல் முழு உறுப்பினர் நாடுகளாக இணைந்தன.
  • SCO-ல் மொத்தம் 8 உறுப்பு நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்