உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க தீவிர பயிற்சித்திட்டம் (Intensive Training Programme) எனும் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
நிர்வாக செயல்பாடுகளில் பெரும் திறத்தோடு பெண்கள் பங்கெடுக்க அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த திறன் கட்டுமான திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (National Institute of Public Cooperation and Child Development-NIPCCD) ஒருங்கிணைக்கின்றது.
2018-க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 50 தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் என தோராயமாக இருபதாயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு திறன் கட்டுமானப் பயிற்சி அளிப்பது நாட்டில் இதுவே முதன் முறையாகும்.
இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள பயிற்சியளிக்கப்பட்ட இரண்டு லட்சம் உள்ளாட்சி பெண் தலைவர்கள் தங்கள் கிராமத்தை மாதிரி கிராமமாக உருவாக்கிட உதவும். மேலும் எதிர்காலத்தில் பெண்களை சிறந்த அரசியல் தலைவர்களாக்கவும் இத்திட்டம் உதவும்.