TNPSC Thervupettagam

தீவுகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டாவது மாநாடு

November 10 , 2017 2600 days 880 0
  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கிய தீவுகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டாவது மாநாடு புதுதில்லியில் நடத்தப்பட்டது.
  • இந்தியாவின் 9 தீவுகளிலும் (ஸ்மித், ராஸ், லாங், அவிஸ்) முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு தீவுகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டாவது மாநாடு புதுதில்லியில் நடத்தப்பட்டது.
  • அந்தமானின் நான்கு தீவுகளும், லட்சத்தீவுகளில் உள்ள மினிக்காய், பங்காரம், தின்னகரா, செரியம், சுகேலி ஆகிய ஐந்து தீவுகளும் இதில் அடங்கும்.
  • இந்த திட்டத்தில், விருத்தியடையும் கடல்சார் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக நிலையான அணுகுமுறையின் அடிப்படையில் வளர்ச்சியை ஊக்குவித்து நிறைவேற்றிட இந்நிறுவனம் திட்டமிடுகிறது.
  • மினிக்காய் தீவில் விமானநிலையத்தை மேம்படுத்த, அரசு-தனியார் பங்களிப்பு திட்டத்தை மேம்படுத்தவும், லட்சத்தீவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சூறை (tuna) மீன்பிடித்தலை ஊக்குவிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  • இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சரால் தலைமை தாங்கப்படுகிறது. மேலும் இதன் திட்டங்கள் நிதி ஆயோக்கினால் இயக்கப்படுகின்றன.
  • இந்த அமைப்பின் உறுப்பினர்களில் அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் செயலாளர், சுற்றுலாத் துறையின் செயலாளர், பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்