TNPSC Thervupettagam

துணிச்சல்மிக்க நபர்களுக்கு அண்ணா வீரதீர விருதுகள்

January 29 , 2022 1035 days 565 0
  • காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கான விருதுகள் என்ற பிரிவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா வீரதீர விருதுகளை வழங்கினார்.
  • நிவர் புயலின் போது சென்னை ஓட்டேரியில் சிதிலமடைந்த ஒரு வீட்டிலிருந்து கணேஷ் என்ற ஒரு ஓவியரைக் காப்பாற்றிய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
  • வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்த இரு சிறுவர்களை மீட்ட விழுப்புரம் மாவட்டத்தின் தீயணைப்பாளர் M. இராஜீவ் காந்திக்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.
  • இரண்டு காட்டு யானைகளை வெற்றிகரமாக மயக்க மருந்தின் மூலம் கட்டுக்குள்  கொண்டு வந்து பல உயிர்களைக் காப்பாற்றிய வனக் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் K. அசோகனுக்கு வீரப் பதக்கம் வழங்கப் பட்டது.
  • வாய்க்காலில் தவறி விழுந்த 5 நபர்களின் உயிரைக் காப்பாற்றிய, சிவகங்கையைச் சேர்ந்த முத்து கிருஷ்ணனுக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
  • கிணற்றில் விழுந்த 4 ஆம் வகுப்பு மாணவரைக் காப்பாற்றிய திருச்சியைச் சேர்ந்த 9 வயது சந்திரசேகரனுக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
  • நீரில் மூழ்கித் தத்தளித்த 5 பள்ளி மாணவர்களைக் காப்பாற்றிய திருப்பூரைச் சேர்ந்த சொக்கநாதன் மற்றும் சுதா ஆகியோருக்கும் இந்த விருதுகள் வழங்கப் பட்டன.
  • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஒரு கட்டிடம் இடிந்து விழும் முன்பாக அதனுள் இருந்த நபர்களை எச்சரித்து அவர்களை வெளியேற்றியதற்காக திருவொற்றியூரைச் சேர்ந்த M. தனியரசுவிற்கு இந்த விருது வழங்கப் பட்டது.
  • சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த C. ராமசாமி என்பவருக்கு மிக அதிக அளவில் நெல் சாகுபடியைச் செய்ததற்காக (ஹெக்டேருக்கு 13,800 கி.கி) வேண்டி C. நாராயணசாமி நாயுடு விருதானது வழங்கப் பட்டது.
  • கள்ளச் சாராயத்தை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றியக் காவலர்களுக்கு காந்தி அடிகள் என்ற காவல் பதக்கமானது வழங்கப் பட்டது.
  • திருப்பூர் தெற்கு, திருவண்ணாமலை தாலுக்கா மற்றும் மதுரை அண்ணா நகர் ஆகிய காவல் நிலையங்கள் மாநிலத்தில் முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களுக்கான சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்வு செய்யப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்