TNPSC Thervupettagam

துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் இல்லை - SC

July 7 , 2018 2337 days 682 0
  • துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்குத் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
  • துணைநிலை ஆளுநர் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைப்படி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. துணைநிலை ஆளுநர் ‘தடுப்பாளராக‘ செயல்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • டெல்லியின் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
  • நிலம், பொது அமைதி மற்றும் காவல்துறை ஆகிய மூன்று துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளின் மீதும் சட்டம் இயற்ற மற்றும் நிர்வாகம் நடத்த டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்