துபாயின் அந்நிய நேரடி முதலீட்டின் முக்கிய மூலமாக விளங்கும் இந்தியா
March 16 , 2025 17 days 85 0
தொடர்ந்து நான்காவது ஆண்டாக புதிய வெளிநாட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) திட்டங்களுக்கான உலகின் மிக முன்னணி இடமாக துபாய் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
துபாயில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான (FDI) மிகவும் முக்கிய மூல நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், துபாயில் அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்ளும் நாடுகளில் அமெரிக்கா, பிரான்சு மற்றும் ஐக்கியப் பேரரசு நாடுகளை இந்தியாவானது முந்தி முதல் இடத்தில் உள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியாவின் பங்களிப்பு ஆனது 21.5% ஆக உள்ளது, அதைத் தொடர்ந்து அமெரிக்கா (13.7%), பிரான்சு (11%), ஐக்கியப் பேரரசு (10%) மற்றும் சுவிட்சர் லாந்து (6.9%) ஆகிய நாடுகளும் உள்ளன.