ISSF உலகக் கோப்பைப் போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
பெண்கள் குழுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிரேயாசி சிங், மனிஷா கீர் மற்றும் இராஜேஷ்வரி குமாரி ஆகிய மூவர் இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
ஆண்களுக்கான குழுப் போட்டியில் ஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தி, கெய்னன் செனாய், பிரித்விராஜ் தொண்டைமான் மற்றும் லக்சாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொத்தமாக 30 பதக்கங்களை வென்று இந்தியா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவையடுத்து 8 பதக்கங்களுடன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பிரித்விராஜ் தொண்டைமான்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் புதுதில்லியில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான குழுப் போட்டியில் இந்தியாதங்கம் வெல்லுவதற்கு உதவினார்.
அவர் கெய்னன் செனாய் மற்றும் லக்சாய் சயோரன் ஆகியோருடன் அணி சேர்ந்து பங்கேற்றார்.