TNPSC Thervupettagam

துராந்த் கோப்பை 2022

August 20 , 2022 827 days 469 0
  • வரலாற்றுச் சிறப்புமிக்க 131வது துராந்த் கோப்பைப் போட்டியானது கொல்கத்தாவில் தொடங்க உள்ளது.
  • ஆசியாவின் பழமையான கால்பந்துப் போட்டியான இது இந்தியாவில் கால்பந்து போட்டித் தொடர் தொடங்கப் பட்டதைக் குறிக்கிறது.
  • பிரித்தானிய ஆட்சியில் இருந்த இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் மார்டிமர் துராந்த் 1888 ஆம் ஆண்டில் துராந்த் கோப்பைப் போட்டியினை நிறுவினார்.
  • ஆரம்பத்தில் ஆயுதப் படையினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட இது, ஆனால், பின்னர் தொழில்முறைக் கால்பந்து அணியினருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
  • துராந்த் கோப்பை கால்பந்துப் போட்டிச் சங்கமானது அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்புடன் (AIFF) இணைந்து இந்த வருடாந்திரப் போட்டியினை நடத்துகிறது.
  • இந்தப் போட்டியின் வெற்றி அணி ஆனது,  துராந்த் கோப்பை, பிரசிடென்சி கோப்பை மற்றும் சிம்லா டிராபி ஆகிய மூன்று கோப்பைகளைப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்