மத்தியத் தரைக்கடல் (Mediterranean) பகுதியின் மெர்சின் (Mersin region) பிராந்தியத்தில் துருக்கி நாட்டினுடைய முதல் அணு சக்தி நிலையத்தின் கட்டுமானத்தை துருக்கி அதிபர் ரெசெப் தய்யீப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) மற்றும் இரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.
துருக்கி நாட்டினுடைய, துருக்கி அணு சக்தி ஆணையமானது (TAEK-Turkey atomic energy authority) நாட்டினுடைய முதல் அணுசக்தி நிலையமான அக்யூ அணுசக்தி நிலையத்தின் (Akkuyu nuclear power plant) முதல் அலகினுடைய கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு இரஷ்ய நாட்டின் அணுமின் நிலைய கட்டுமான நிறுவனமான ரோசாடாம் (Rosatom) கட்டுமான நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது.
இந்த அணுசக்தி நிலையம் கட்டி முடிக்கப்பட்டால் துருக்கி நாட்டினுடைய மின்தேவையில் 10 சதவீதத்தினை பூர்த்தி செய்யும்
அணுசக்தி நிலைய கட்டுமானத்தின் முதல் கட்டமானது 2023 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும். 2023 ஆம் ஆண்டானது நவீன துருக்கியின் 100-வது நிறுவன வருடமாகும். கட்டுமானப் பணிகளானது 2026 ஆம் ஆண்டு முழுவதும் நிறைவடையும்.
கட்டமைக்கப்பட்டு வரும் அக்யு அணுசக்திக் கூடமானது உலகில் கட்டமைப்பின் கீழ் உள்ள 56-வது அணு சக்தி நிலையமாகும்.