துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளைத் தாக்கிய மாபெரும் நிலநடுக்கம்
February 11 , 2023 656 days 287 0
பிப்ரவரி 06 ஆம் தேதியன்று, துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் 3,800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு ஆயிரக் கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாயின.
ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் ஆனது துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தின் பசார்சிக் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது.
அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாகவே, அதே பகுதியில் 7.6 ரிக்டர் என்ற அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.
7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் மாபெரும் நிலநடுக்கமாக கருதப் படுகிறது.
துருக்கி நாடானது, உலகிலேயே அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படக் கூடிய மண்டலங்களில் அமைந்த நாடுகளுள் ஒன்றாகும்.
அந்நாட்டில் கடைசியாக 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆனது 1939 ஆம் ஆண்டில் கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் ஏற்பட்டு அதில் 33,000 பேர் உயிரிழந்தனர்.
1999 ஆம் ஆண்டில், துருக்கிய நாட்டின் டஸ் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டு அதில் 17,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.