முதன்முறையாக, மேற்கு வங்காள மாநிலத்தின் புருலியா மாவட்டத்தின் காடுகளில் துரும்பன் பூனை சுற்றித் திரிவது கண்டறியப்பட்டுள்ளது.
இது உலகின் மிகச்சிறிய மற்றும் இலகுவான எடை கொண்ட பூனையாகும்.
துரும்பன் பூனையானது, இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுகிறது, என்ற நிலையில் இது சமீபத்தில் நேபாளத்தின் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தப் பூனைகளில் 80 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது என்பதோடு நிலப் பயன்பாட்டு மாற்றத்தினால் அவற்றின் வாழ்விடத்தின் பெரும்பகுதி மிக அபாயத்தில் உள்ளது.