TNPSC Thervupettagam

துருவப் பகுதி சுழல் காற்று

February 2 , 2019 2124 days 803 0
  • துருவப் பகுதி சுழல் காற்றின் காரணமாக பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தின்போது வடக்கு அமெரிக்க மாநிலங்களின் பெரும்பகுதி வரலாற்றுப் பதிவான குறைந்தபட்ச குளிர் வெப்பநிலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
  • துருவப் பகுதி சுழல்காற்று என்பது வடதுருவத்தைச் சுற்றியிருக்கும் உயர்வளிமண்டலத்தில் இருக்கும் ஒரு வலுவான காற்றின் பட்டைத் தொகுப்பாகும். இந்த வடதுருவம் வழக்கமாக கடுமையான குளிர்காற்றை ஆர்க்டிக் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளோடு தடுத்து விடுகின்றது.
  • சுழல்காற்றுகள் சூறாவளியைப் போன்று எதிர்காற்றுத் திசையில் சுழலும் அடர்த்தியான காற்று மற்றும் அதிக நிறை கண்ட குளிர் காற்று ஆகியவற்றால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன.
  • வழக்கமாக குளிர்காற்று தொலைதூர வடக்குப் பகுதியிலேயே தங்கி விடுகின்றது.
  • இருந்தாலும் ஆர்க்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை அக்காற்றை தெற்கு நோக்கி பயணிக்கச் செய்கின்றது.
  • இந்த சுழற்காற்று வட அமெரிக்காவின்மீது ஒரு பகுதி இருக்கும்படியும் வடக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் மீது மற்றொரு பகுதி இருக்கும்படியும் இரண்டு காற்று நிறைகளாக உடைந்திருக்கின்றது.
  • இது ஒரே நேரத்தில் புதிய பகுதிகளில் நிறைய நாட்களுக்கு ஜீரோவிற்கு குறைவான வெப்பநிலைகளை ஏற்படுத்துவதில் திறன் பெற்றது.
  • 2014 ஆம் ஆண்டின் துருவப் பகுதி சுழல்காற்று குளிர்காலங்கள் முழுவதும் நீடித்தமையால் மிகவும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்