TNPSC Thervupettagam

துருவ செயற்கைக்கோள் அமைப்பு

November 20 , 2017 2589 days 1159 0
  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது கூட்டு துருவ செயற்கைக்கோள் அமைப்பு-1 (JPSS – Joint Polar Satellite System – 1) என்றழைக்கப்படும் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.
  • இந்த செயற்கைக்கோள் United launch Alliance எனும் கூட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டெல்டா – II (Delta – II) எனும் இராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் உள்ள வன்டென்பெர்க் விமானப்படைத் தளத்திருந்து ஏவப்பட்டு சுற்றுப் பாதையில் நிறுத்தப்பட்டது.
  • JPSS – 1 ஆனது தனது கடைசி சுற்று வட்ட பாதையை அடைந்த உடன் NOAA-20 என மறு பெயரிடப்படும்.
  • JPSS-1 செயற்கைக்கோள் பெறப்படும் தரவுகளானது எல்-நினோ மற்றும் லா-நினோ போன்ற வானிலையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தவல்ல பருவ நிலை போக்குகளினை உறுதிப்படுத்தலை மேம்படுத்த இயலும்.
  • JPSS-1 ஆனது அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட அதி நவீன துருவ-சுற்றுவட்ட செயற்கை கோள்களின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும்.
  • அடுத்த தலைமுறைக்கான தொழிற்நுட்பங்களோடு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் சுற்றுச்சூழலை கண்காணிக்கவும், அமெரிக்காவின் வானிலை முன்கணிப்பின் துல்லியத்தை அதிகரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 512 மைல் உயரத்தில் பூமியின் ஒரு துருவத்திலிருந்து இன்னொரு துருவத்திற்கு பயணித்து ஒரு நாளில் பூமியை 14 முறை சுற்றி வர உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்