TNPSC Thervupettagam
October 25 , 2018 2224 days 668 0
  • ரஷ்யாவின் சிறப்புப் படைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான துருஷ்பா 2018 (நட்புறவு 2018) என்ற இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியானது பாகிஸ்தானில் தொடங்கியது.
  • பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா பகுதியில் உள்ள நவ்ஷெரா மாவட்டத்தின் வடமேற்கு குன்றுப் பகுதிகளில் இந்தப் பயிற்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இரண்டு வார கால இந்த கூட்டு இராணுவப் பயிற்சியானது இரு நாடுகளுக்குமிடையேயான இராணுவங்களை வலிமைப்படுத்துவதையும் ஒத்துழைப்பைக் கட்டமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இருதரப்புப் பயிற்சி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் 3-வது கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும்.
துருஷ்பா இராணுவப் பயிற்சி
  • இப்பயிற்சியானது ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் இடையே 2016-ல் தொடங்கப்பட்டது.
  • துருஷ்பா என்ற ரஷ்ய வார்த்தைக்கு நட்பு என்று பொருள்.
  • இதன் முதல் பதிப்பு அக்டோபர் 2016-ல் வடக்கு பாகிஸ்தானில் நடைபெற்றது.
  • இதன் இரண்டாம் பதிப்பு ரஷ்யாவில் செப்டம்பர் 2017-ல் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்