கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கௌடா காலமானார்.
அவர் ஹலக்கி பழங்குடியின சமூகத்தினரால் "மரங்களின் தெய்வம்" என்று போற்றப் படுகிறார்.
அவர் ‘காடுகளின் கலைக்களஞ்சியம்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
கௌடா கர்நாடகா முழுவதும் 1 லட்சம் மரங்களை நட்டு வளர்த்தப் பெருமையினை கொண்டுள்ளார்.
அவர் ஒரு சமூக வளங்காப்பகம், ஐந்து புலிகள் வளங்காப்பகங்கள், 15 பாதுகாப்புச் சரணாலயங்கள் மற்றும் 30 வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளிட்டப் பலவற்றினை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.