பெரும் வண்டல் படிவுகள், தொல்பொருள் மற்றும் கடல்சார் படிவுகளின் அறிவியல் பகுப்பாய்வு மூலம் அங்கு மீட்கப்பட்டப் பொருட்களின் தொன்மையினைக் கண்டறிய இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, துவாரகாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கோமதிக் கடற்கழியின் தெற்கில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஐந்து பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.
முற்காலத்தில் கிருஷ்ணர் வாழ்ந்ததாக என்று நம்பப்படும் பெய்ட் துவாரகா, குஜராத் கடற்கரையில் உள்ள தீவு என்பதோடு அங்கு துவாரகாதீஷ் கோயில் அமைந்துள்ளது.
இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் கடலடி தொல்பொருள் ஆய்வுப் பிரிவு 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரை துவாரகையில் முறைசார் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டது.