TNPSC Thervupettagam

தூதர்களை வெளியேற்றுதல்

March 30 , 2018 2431 days 786 0
  • ரஷ்யா செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடப் போவதாகவும், 60 அமெரிக்கத் தூதர்களை வெளியேற்றப் போவதாகவும் கூறியுள்ளது.
  • ஐக்கியப் பேரரசில் (K.) முன்னாள் உளவாளிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறிய விவகாரத்தால் சென்ற வாரம் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் சேர்ந்து டஜன் கணக்கில் ரஷ்யத் தூதர்களை வெளியேற்றி உத்தரவிட்ட ஆணைக்குப் பழிக்குப் பழி வாங்கும் விதமாக ரஷ்யா இதனை செய்துள்ளது.
  • ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மாஸ்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருக்கும் 58 அலுவலர்களும், ஏகடரீன்பெர்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருக்கும் 2 பணியாளர்களும் அழையா அரசியல் பிரதிநிதிகள் (persona non-grata) என்றும் அவர்கள் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு முன்பாக ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

  • ஐக்கியப் பேரரசில் (K.) முன்னாள் ரஷ்ய உளவாளி செர்ஜி ஸ்கிரிவால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோருக்கு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருள் வைத்த காரணத்தின் பேரில், உளவாளிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 60 ரஷ்யாவின் தூதர்களை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், சியாட்டிலில் உள்ள ரஷ்யாவின் தூதரகத்தை மூட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  • தொடர்ச்சியாக, 14 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச பதிலடி நடவடிக்கையாக மொத்தம் 30 ரஷ்யத் தூதர்களை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளன.
  • பனிப்போருக்குப் (Cold War) பிறகு இதுவே மிகப்பெரிய அளவில் ரஷ்யாவின் தூதர்களை வெளியேற்றும் மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கையாகும்.
  • ஆஸ்திரேலியாவும், பிரிட்டனில் நடந்த உளவாளியின் மீதான தாக்குதல் காரணமாக, தமது நாட்டிலிருந்து இரண்டு ரஷ்யத் தூதர்களை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளது.
  • ஐக்கியப் பேரரசு (K.) ஏற்கனவே ரசாயன ஆயுதங்களைத் தடுக்கும் அமைப்பிற்கு விஷ தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப்  பொருளை (nerve agent) (நோவிசோக் வகை நரம்பு பொருள் என்று அழைக்கப்படுகிறது) ஆய்வு செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்