அரசினுடைய அண்மைய தூய்மைமிகு இடங்களுக்கான (cleanliness survey) கணக்கெடுப்பில், இந்தூர் நகரமானது நாட்டின் தூய்மையான நகரமாக (cleanest city) உருவாகியுள்ளது. இந்தூரைத் தொடர்ந்து இக்கணக்கெடுப்பில் போபால் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்கள் உள்ளன.
சுவச் சர்வேக்ஷான் 2018 (Swachh Survekshan 2018) எனும் பெயருடைய அரசின் இந்த தூய்மைக் கணக்கெடுப்பின் நோக்கம், நாட்டில் உள்ள நகரங்கள் முழுவதும் நிலவுகின்ற தூய்மையினுடைய அளவினை மதிப்பிடுவதாகும்.
இந்த கணக்கெடுப்பில் தூய்மைக்காகச் சிறந்த முறையில் செயலாற்றும் மாநிலமாக (best performing state) ஜார்க்கண்ட் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்த இடங்களில் மகாராஷ்டிரா மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கடந்த ஆண்டிற்கான சுவச் சர்வேக்ஷான் பட்டியலிலும் இந்தூர் நகரமே முதலிடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு இக்கணக்கெடுப்பானது 430 இந்திய நகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இம்முறை சுமார் 4200 நகரங்களில் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.