TNPSC Thervupettagam

தூய்மைமிகு புராதன இடங்கள்

November 24 , 2017 2428 days 885 0
  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் தொடக்கமான தூய்மைமிகு புராதன இடங்களைப் [Swach Iconic Places – SIP] பற்றிய இரு நாள் தேசிய கலந்தாய்வு டெல்லியில் அண்மையில் நடைபெற்றது.
  • தூய்மைமிகு புராதன இடங்கள் திட்டமானது, நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புராதன, ஆன்மீக, கலாச்சார இடங்களில் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஓர் சிறப்பு தொடக்கமாகும்.
  • இத்தொடக்கமானது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மத்திய கலாச்சார துறை அமைச்சகம், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் மற்றும் சம்மந்தப்பட்ட  மாநிலங்களின் கூட்டு ஒத்துழைப்போடு மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
  • தற்போது இத்திட்டத்தினுடைய இரண்டாவது கட்டத்தின் கீழ் 10 புதிய  புராதன இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • கங்கோத்ரி
    • சார்மினார்
    • யமுனோத்ரி
    • மஹாகலீஸ்வரர் கோவில்
    • பாஜ்னாத் தாம்
    • கயாதீர்த்தம்
    • சோம்நாத் ஆலயம்
    • காலடி நகரம்
    • கோமதீஸ்வரர் ஆலயம்
    • அஸிஸியின் செயின்ட் பிரான்சிஸ்   திருச்சபை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்