தூய்மையான ஆற்றல் பயன்பாட்டு மாற்றத்திற்கான திட்டம் 2023
April 18 , 2024 371 days 320 0
தூய்மையான ஆற்றல் பயன்பாட்டு மாற்றத்திற்கான திட்டம் (CETP) என்பது உலகளாவிய நிகரச் சுழிய உமிழ்வு கொண்ட ஆற்றல் பயன்பாட்டு அமைப்பினை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான சர்வதேச எரிசக்தி முகமையின் முதன்மையான முன்னெடுப்பாகும்.
இதன் இலக்குகள் ஆனது, ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப் பட்ட, 2015 ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையான மேம்பாட்டு இலக்குகளின் நோக்கங்களுக்கு ஏற்ப உள்ளன.
CETP திட்டத்தின் மூன்று முக்கியத் தூண்கள்:
தேசிய அளவில் மாற்றங்களைத் துரிதப்படுத்துதல்,
பலதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும்
உலகளாவிய ஆற்றல்சார் பேச்சுவார்த்தைகளைச் செயல்படுத்துதல்.