TNPSC Thervupettagam

தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய சந்தை

November 13 , 2024 12 days 91 0
  • சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) இது போன்ற முதல் ஆய்வு வெளியீடு இதுவாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் 700 பில்லியன் டாலராக இருந்த தூய்மையான எரிசக்தி தொழில் நுட்பங்களுக்கான உலகளாவிய சந்தையானது 2035 ஆம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலராக உயரும்.
  • இதில் சூரியசக்தி ஒளி மின்னழுத்தம், காற்றாலை விசையாழிகள், மின்சார மகிழுந்து, மின் சேமிப்புக் கலம், மின்னாற் பகுப்பு மற்றும் வெப்ப ஏற்றிகள் ஆகியன  அடங்கும்.
  • இந்த மதிப்பு ஆனது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் கச்சா எண்ணெய் சந்தையின் மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது.
  • இத்துறையில் அதிக முதலீடு செய்த நாடுகள் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியனவாகும்.
  • தூய்மையான தொழில்நுட்பங்களின் மீதான எதிர்காலத்திற்கான உலகின் ஒரு பெரிய உற்பத்தி சக்தியாக சீனா நிலைத்திருக்கும்.
  • அமெரிக்காவில் பருவநிலைக்கு உகந்த பல தொழில்நுட்பங்களின் உற்பத்திக்கான செலவு சீனாவை விட 40% அதிகமாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 45% அதிகமாகவும், இந்தியாவில் 25% அதிகமாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்