அனைவரும் தூய்மையான பொது கழிப்பறைகளை மிக எளிதாக அணுகுவது என்பது வசதி சார்ந்த விவகாரம் மட்டுமல்ல, அது ஒரு அடிப்படை உரிமை மற்றும் மனித கண்ணியத்தின் இன்றியமையாத பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது அனைத்து ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநர்களுக்கும் பொருந்தும்.
முறையான சுகாதாரத்திற்கான அணுகல் என்பது அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.