மத்திய அமைச்சரவையானது பசுமை வழி தாவரங்கள் (Clean Plant) திட்டத்திற்கு (CPP) ஒப்புதல் அளித்துள்ளது.
இது இந்தியாவில் தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
நாடு முழுவதும் உள்ள பழப் பயிர்களின் தரத்தை உயர்த்துவதையும் CPP இலக்காகக் கொண்டுள்ளது.
பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், வருமான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வைரஸ் தொற்று இல்லாத, உயர்தர நடவுப் பொருட்களைப் பெற விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது.
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
2013-14 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை 24 மில்லியன் ஹெக்டேராக இருந்த தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பானது 28.63 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
277.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி என்பது தற்போது 352 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இந்தியா புதிய (செயல்முறைக்கு உட்படுத்தாத) பழங்களை அதிகளவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில், இந்தியா சுமார் 1.15 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய பழங்களை ஏற்றுமதி செய்தது அதே நேரத்தில் சுமார் 2.73 பில்லியன் டாலர் மதிப்புள்ள பழங்களை இறக்குமதி செய்தது.