தென்ஆப்பிரிக்காவின் டர்பனில் நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
October 22 , 2017 2737 days 1049 0
2017 நவம்பர் 16 முதல் 20 வரை தென் ஆப்ரிக்காவின் டர்பனில், நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெறவிருக்கிறது.
வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொழில்முறை பிணையம், அறிவினைப் பரிமாறுதல் மற்றும் உலகத்தின் தற்போதைய பொருளாதார சூழல் ஆகியவைகளைப் பற்றி விவாதிப்பதற்கான தனித்தன்மை வாய்ந்த தளத்தினை இந்த மாநாடு அளிக்கவிருக்கின்றது.
இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் ஏனைய பிற நாடுகளின் அரசாங்கம் வணிகம் மற்றும் பிற துறைகளில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
உலகத் தமிழர் பொருளாதார கூட்டமைப்பும் (World Tamils Economic Federation) மெட்ராஸ் வளர்ச்சி சங்கமும் (Madras Development Society) இணைந்து இந்த மாநாட்டினை நடத்தவிருக்கிறது.